இந்தியா

சுவர் ஏறி குதித்து கொடூரமாக நடத்த வேண்டிய அவசியம் என்ன? விஜயதாரணி ஆவேசம்!

Published

on

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சென்று கைது செய்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

தமிழ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த விஜயதாரணி, பல லட்சம் கோடியை ஏமாற்றி விட்டு தப்பி சென்ற விஜய் மல்லையா, லலித் மோடி போன்றவர்களை பிடிப்பதற்கு இந்த அரசு என்ன முயற்சி எடுத்துள்ளது? இங்கிலாந்தில் எந்த சுவரை ஏறி குதித்தது இந்த அரசு. ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். முன்னாள் மத்திய நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர். முன்னாள் மத்திய அமைச்சரை மரியாதை குறைவாக நடத்த வேண்டிய அவசியம் என்ன? அந்த அளவிற்கு இவர்கள் செய்கிறார்கள் என்றால் இது அரசியல் காழ்புணர்ச்சிதான்.

சிபிஐ விசாரணைக்காக இங்கே இருக்கிறவர் அவர். வெள்ளிக்கிழமை அன்று உச்சநீதிமன்றத்தில் மனு வரப்போகிறது. அதற்குள் சுவர் ஏறி குதித்து கொடூரமாக நடத்த வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார் விஜயதாரணி. மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த கைதை நிறைவேற்ற வேண்டும் என்கிற நோக்கில் ஒரு நாடகமாக இதை கையாண்டுள்ளனர். எதிரிகளுக்கு கூட அவர் மீது இரக்கம் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சட்டம், ஜனநாயகம் எல்லாவற்றையும் மீறி நடத்தப்படுகின்ற இந்த விதத்தைப் பார்த்து அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்றார் விஜயதாரணி.

seithichurul

Trending

Exit mobile version