தமிழ்நாடு

பிரேமலதாவை அடுத்து விருப்பமனு கொடுத்தார் விஜயபிரபாகரன்!

Published

on

விஜயகாந்த் ஆரம்பித்த தேமுதிக என்ற கட்சி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து கொண்டு வந்த நிலையில் திடீரென விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பு காரணமாக கட்சியின் உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டது.

தேமுதிக கட்சி விஜயகாந்த் கையைவிட்டு பிரேமலதா மற்றும் எல்கே சதீஷ் கைக்கு வந்த பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தேய தொடங்கியது. தற்போது ஏதாவது ஒரு கூட்டணியில் இடம் கிடைத்தால் போதும் என்ற நிலையில் தான் தேமுதிக உள்ளது.

அதிமுக, திமுக ஆகிய இரண்டு கூட்டணிகளும் தேமுதிகவை கண்டுகொள்ளாமல் இருப்பதால் இந்தத் தேர்தலில் தேமுதிக தனித்து கைவிடப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் எந்த கூட்டணியில் இருக்கிறோம் என்றே தெரியாமல் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர் தேமுதிக நிர்வாகிகள்.

இந்த நிலையில் தேமுதிக சார்பில் விஜயகாந்த், பிரேமலதா மற்றும் விஜயபிரபாகரன் ஆகிய மூவருமே போட்டியிட இருப்பதாக கூறப்பட்டது. ஏற்கனவே பிரேமலதா தனது விருப்ப மனுவை தாக்கல் செய்து விட்ட நிலையில் சற்றுமுன் விஜயபிரபாகரன் தனது விருப்ப மனுவை தேமுதிக தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளார். விஜயகாந்த், பிரேமலதா, விஜய பிரபாகரன் ஆகிய மூவரும் எந்தெந்த தொகுதிகள் போட்டியிடுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version