சினிமா செய்திகள்

பிரபல விஜய் பட இயக்குநர் காலமானார்!

Published

on

விஜய்யை வைத்து வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் பாபு சிவன் காலமானார்.

சென்னை தாம்பரத்தில் வசித்து வந்த பாபு சிவன், உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல் இழப்புக் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த பாபு சிவன், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

பிரபல இயக்குநர் தரணியின் உதவியாளராக இருந்தவர் பாபு சிவன். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தை இயக்கியும் உள்ளார். பின்னர் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னதிரையில் ராசாத்தி என்ற நெடுந்தொடரை இயக்கி வந்தார்.

பாபு சிவன் உடலுக்குத் திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version