டிவி

விஜய் டிவி பிரபலங்களுடன் அறந்தாங்கி நிஷாவின் சேட்டைகள்! #FunVideo

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா. இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் சில நாட்கள் வெளியே வராமல் குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வந்தார். தற்போது அவர் மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இப்படி அவர் செட்டுக்குத் திரும்பியவுடன் மற்ற பிரபலங்களுடன் செய்யும் சேட்டைகளை வீடியோவாக தொகுத்து வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ:

சில நாட்களுக்கு முன்னர் நிஷா, ‘எனக்கு பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆதரவு கொடுத்த எல்லாருக்கும் ரொம்ப நன்றி. முன்ன பின்ன தெரியாதவங்களுக்கு நீங்க இவ்ளோ ஆதரவு கொடுத்ததுக்கு நன்றி. எனக்குத் தொடர்ச்சியா உங்க ஆதரவு வேணும். நான் எங்கேயோ போய்ட்டதா சோஷியல் மீடியாவுல கொஞ்சம் நெகட்டிவான செய்திகள்லாம் பரவிட்டு இருந்துச்சு. அப்படிலாம் எனக்கு ஒண்ணும் ஆகல. இங்கதான் இருக்கேன்னு சொல்லத்தான் இந்த வீடியோ.

உங்களுக்கு என் கிட்ட கேட்க நிறைய கேள்விகள் இருக்கும். எல்லாத்துக்கும் பதில் சொல்றேன். யார பற்றி வேணாலும் கேள்வி கேட்கலாம். எல்லா கேள்விகளுக்கும் நான் நேர்மையான பதில சொல்லுவேனு உறுதியா சொல்லிக்கிறேன். நான் சீக்கிரமே நீங்க விரும்புற நிஷாவ வருவேன். நன்றி’ என்று முடித்துக் கொண்டார்.

 

seithichurul

Trending

Exit mobile version