சினிமா செய்திகள்

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

Published

on

விஜய் டிவி சீரியலில் நடிக்க பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பை விஜய் டிவி நிறுவனம் வழங்கியுள்ளது. முன்னதாக, கனா காணும் காலங்கள், ஆபிஸ் சீரியல்களில் நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இந்த வாய்ப்பு.. பொதுமக்களுக்குக் கிடைக்க உள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் புதிய தொடரில் நடிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு, ஒரு ஆடிஷனை நடத்துகிறது விஜய் டிவி.

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தங்களது டுவிட்டர் தளத்தில் தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

விஜய் டிவியில் முகம் காட்டினால் சூப்பர்ஸ்டார் ஆகிவிட முடியாது. நிச்சயம் உங்களுக்குள் தனித்திறமை மற்றும் விடாமுயற்சி இருந்தால், நீங்களும் தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறலாம்!

உங்களது புகைப்படம், விபரங்கள், முகவரி மற்றும் நீங்கள் நடித்த வீடியோ பதிவுகளை vijaytvserialaudition@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பங்கள். உங்கள் வாய்ப்பு உங்கள் இ-மெயில் தேடி வரும்!

seithichurul

Trending

Exit mobile version