சினிமா செய்திகள்

இதுவரை அதிகம் பேர் பார்த்திராத ரக்‌ஷனின் மனைவி புகைப்படம்!

Published

on

விஜய் டிவியில் விஜேவாக இருக்கும் ரக்சன் திருமணமானவர் என்றும் அவருக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது என்று கூறினால் யாராவது நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரக்சன் தனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகி விட்டதாகவும் தனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது மனைவியின் பெயர் சரண்யா என்றும் கூறியுள்ளார். ரக்சனுக்கு தற்போது 30 வயது மட்டுமே ஆகின்ற நிலையில் அவருக்கு 20 வயதிலேயே திருமணமாகியுள்ளது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. இதனால் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

ரக்சனுக்கும் விஜய் டிவி ஜாக்குலினுக்கு காதல் இருந்ததாக கிசுகிசு வந்தபோது கூட தனக்கு திருமணம் ஆனதை ரக்சன் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரக்சனின் மனைவி புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது. அதிகம் பேர் பார்த்திராத இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரக்சன் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும், அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version