டிவி

‘குக்கு வித் கோமாளி’ கொண்டாட்ட நிகழ்ச்சியில் புகழ் எங்கே?- ரசிகர்கள் தொடர் கேள்வி

Published

on

விஜய் டிவி-யின் குக்கு வித் கோமாணி சீசன் 2 நிகழ்ச்சியின் கொண்டாட்டம் எபிசோட் வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது.

இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிக்காகத் தொடர்ந்து விஜய் டிவி-உஇல் ப்ரோமோக்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சியிலும் அஸ்வின் – சிவாங்கி மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் மீம்ஸ் போட்டுக் கொண்டு காத்திருக்கத் தொடங்கினர்.

அஸ்வின் – சிவாங்கியைப் போலவே புகழின் காதல் சில்மிஷங்களும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலம். ஆனால், எந்தவொரு ப்ரோமோ வீடீயோவிலும் புகழ் வருவது போன்றே காண்பிக்கப்படவில்லை. இதனால் சமுக வலைதளங்களில் புகழ் எங்கே? என குக்கு வித் கோமாளி ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

இந்த சூழலில் இன்ஸ்டாகிராம் தளத்தில் சக்தி லைவ் வர அவரிடம் புகழ் எங்கே? என்ற கேள்வியை ரசிகர்கள் முன் வைக்கத் தொடங்கினர். புகழ் அதிகப்படியான படங்களில் ஒப்பந்தம் ஆகி தொடர்ச்சியாக படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருவதால் அவர் குக்கு வித் கோமாளி சீசன் 2 கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என சக்தி தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version