சினிமா செய்திகள்

வலிமை படத்தில் ’தல’ உடன் இணைந்த ‘குக் வித் கோமாளி’ நட்சத்திரம்..!

Published

on

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் விஜய் டிவி நட்சத்திரம் ஒருவர் புதிதாக இணைந்துள்ளார்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நாயகன் என்றே அழைக்கப்படுபவர் புகழ். காமெடி நிறைந்த நிகழ்ச்சியை முழுவதுமாக கைப்பற்றி பெரும் புகழ் பெற்ற புகழ் தற்போது வலிமை படத்தில் இணைந்துள்ளார். இணைந்த செய்தி மெதுவாகத் தான் கசிந்துள்ளது என்றே கூறப்படுகிறது.

காரணம், புகழ் தனது பகுதி ஷூட்டிங்கை ஏற்கெனவே முடித்துவிட்டாராம். நாயகன் அஜித் உடன் இணைந்து நடிக்கும் காட்சிகளும் புகழுக்குக் கிடைத்துள்ளதாம். சமீபத்தில் ஹைதராபாத்துக்குச் சென்று தனது பங்கு ஷீட்டிங்கை முடித்துவிட்டு வந்துள்ளாராம் புகழ். அவரது ரோல் என்ன என்பது குறித்தத் தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை. தல அஜித் படப்பிடிப்பின் போது காயம் அடைந்துள்ளதால் படப்பிடிப்பு தாமதம் ஆகிறதாம்.

வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும் என வலிமை படக்குழுவினர் உறுதி அளித்துள்ளார்கள்.

Trending

Exit mobile version