சினிமா

இவர்தான் குக் வித் கோமாளி புகழின் காதலியாம்…. அவரே பகிர்ந்த புகைப்படம்…..

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பேராதரவை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. எந்த நிகழ்ச்சிக்கும் இல்லாத டி.ஆர்.பி இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்தது. இதைப்பார்த்துதான் சன் டிவியும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு சமையல் நிகழ்ச்சியை துவங்கியது. ஆனால், குக் வித் கோமாளி போல் அந்த நிகழ்ச்சி வரவேற்பை பெறவில்லை.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இவருக்கு என ரசிகர்களே உருவாகினர். இந்த நிகழ்ச்சியில் அவர் அடித்த லூட்டி கொஞ்ச நஞ்சமல்ல. இதன் காரணமாக அவருக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது. அஸ்வின் நடித்த என்ன சொல்ல போகிறாய் படத்திலும் அவருடன் இணைந்து காமெடி செய்திருந்தார் புகழ்.

இந்நிலையில், தனது காதலி ரியாவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார் புகழ். விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, அவர்கள் இருவருக்கும் நெட்டிசன்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version