சினிமா செய்திகள்

தொழிலதிபரை இரண்டாம் திருமணம் செய்கிறாரா விஜய் டிவி டிடி?

Published

on

விஜய் டிவி மூலம் புகழ்பெற்ற பலரில் ஒருவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி என்பது தெரிந்ததே. இவர் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் என்றும் அதுமட்டுமின்றி சொந்தமாகவே சில நிகழ்ச்சிகளை விஜய் டிவிக்காக தயாரித்து உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இவர் தொகுத்து வழங்கிய ‘ஜோடி நம்பர் 1’, ‘சூப்பர் சிங்கர்’, ‘காபி வித் டிடி’, ‘ஹோம் ஸ்வீட் ஹோம்’ ஆகிய நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் பல பிரபலங்களை இவர் ஜாலியாக பேட்டி எடுத்த விதம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு தனது நெருங்கிய நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் டிடி. ஆனால் திருமணமான சில மாதங்களுக்குள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். அதன் பின்னர் டிடி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் கேரள தொழிலதிபர் ஒருவரை டிடி இரண்டாவதாக திருமணம் செய்ய இருப்பதாக ஒரு தகவல் மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் டிடி தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் இதுகுறித்து பரவி வரும் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version