சினிமா செய்திகள்

விஜய் டிவி டிடி பதிவு செய்த நீச்சலுடை வீடியோ: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

Published

on

விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய ’காபி வித் டிடி’ என்ற நிகழ்ச்சியை மிகவும் பிரபலமானது என்பதும் பல பிரபலங்களிடம் இவர் எடுத்த பேட்டி வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற இருக்கும் டிடி, அங்கிருந்து கொண்டே தனது இன்ஸ்டாவில் மாலத்தீவின் அழகை புகைப்படங்களாக பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாவில் மாலத்தீவில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் உடையுடன் இருக்கும் வீடியோ ஒன்றை டிடி வெளியிட்டுள்ளார்.

நீச்சல் உடையுடன் கூடிய வீடியோவை வெளியிடலாமா? வேண்டாமா? என்று ஒரு நிமிடம் யோசித்தேன் என்றும் ஆனால் அதன் பின்னர் நான் விரும்புவதை செய்வதற்கு ஏன் தயங்க வேண்டும் என்றும் இந்த இடத்தை நான் அடைவதற்கு 23 ஆண்டுகள் உழைத்து இருக்கின்றேன் என்றும் அதனால் எனக்கு எது மகிழ்ச்சியாக இருக்கிறதோ அதை தைரியமாக செய்வேன் என்று டிடி இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு திருப்தி கிடைக்கும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவருக்கு ஆதரவாக கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version