டிவி

பிக்பாஸ் ஆரியை விமர்சித்த விஜய் டிவி பிரபலம்… வச்சு செய்த ஆரி ஆர்மி..!

Published

on

பிக்பாஸ் ஆரியை விஜய் டிவி பிரபலம் ஒருவர் விமர்சனம் செய்ததற்கு எதிராக ஆரி ஆர்மியினர் கொதித்துள்ளனர்.

பிக்பாஸ் ஆரி வாங்கும் ஓட்டுகள் பி.ஆர் குழுக்களின் வேலை என விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷன் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவு செய்திருந்தார். இதற்கு ஆரி ரசிகர்கள், ஆரி ஆர்மியினர் என அத்தனை பேரும் கொதித்து எழுந்து ட்விட்டரில் விஜய் டிவி ரக்‌ஷனுக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கத் தொடங்கினர்.

ஆனால், விஜய் டிவி ரக்‌ஷன் இதுகுறித்து மெதுவாகவே உணர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆரி ஆர்மியினரின் விமர்சனத்தால் விஜய் டிவி ரக்‌ஷன் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. பின்னர் விளக்க ஸ்டேட்டஸ் வெளியிட்டுள்ள ரக்‌ஷன், “என்னுடைய கடைசி பதிவு மிகவும் தவறானது. அது குறித்து எனக்குத் தொலைபேசி அழைப்புகள் வரும் வரையில் நான் அந்த விஷயத்தை உணரவே இல்லை. எனக்கு ஆரி அண்ணனை மிகவும் நல்லாவே தெரியும். இரண்டு முறை அவரைச் சந்தித்தும் உள்ளேன். இது முழுவதும் தெரியாமல் நடந்த விஷயம். அண்ணா வெளியில் வரும் போது அவரைச் சந்திக்க காத்திருக்கிறேன்” என விளக்கம் அளித்துள்ளார்.

ஆரிக்குக் கிடைக்கும் ஓட்டுகள் மக்கள் முடிவு அல்ல அது பிஆர் குழுவினரின் செயல்பாடு என விமர்சித்த ரக்‌ஷனை மன்னிப்பு கேட்கும் அளவுக்கு கொண்டு வந்துள்ளனர் ஆரி ஆர்மியினர். மேலும், விஜய் டிவியின் பல முக்கிய பிரபலங்கள் தங்களது சேனல் சாந்ர்த பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமே ஒட்டு அளிப்பதாக வெளிப்படையாகவே அறிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version