டிவி

விஜய் டிவி டிடி-க்கு திருமணம்: அதுக்கும் ஒரு ‘ஷோ’ போட்ராதிங்கடா… குமுறும் நெட்டிசன்கள்!

Published

on

விஜய் டிவி தொகுப்பாளராகக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கலக்கிக் கொண்டிருப்பவர் டிடி எனச் செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி.

விஜய் டிவி டிடி தற்போது தனது திருமணத்துக்குத் தயாராகிவிட்டாராம். கடந்த 2014-ம் ஆண்டு டிடி தனது நீண்ட கால நண்பர் ஶ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் டிடி தொடர்ந்து டிவி-யில் பணியாற்ற விரும்ப அதற்கு புகுந்த வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதாகக் கூறப்படுகிறது.

கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பரஸ்பரம் பிரிந்து கொள்வதென முடிவு செய்து கடந்த 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர் டிடி வழக்கம் போல் டிவி நிகழ்ச்சிளைத் தொகுத்து வழங்குதல், தயாரிப்பு, சினிமா எனத் தொடர்ந்து பிஸியாகவே இயங்கிக் கொண்டிருக்கிறார். தற்போது டிடி-க்கு மறுமணம் செய்து வைக்க குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருடன் டிடி-க்கு திருமணம் பேசப்பட்டு உள்ளதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்த செய்தி வெளியானதும் நெட்டிசன்கள் பயந்த ஒரே விஷயம் என்னவென்றால் விஜய் டிவி இதற்கும் ஒரு ஷோ போட்டுவிடக் கூடாது என்பதுதான். மேலும், விஜய் டிவி நடத்தி வைக்கும் எந்தத்  திருமணமும் நிஜ வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமாக இருப்பதில்லை என்றும் அதனால் விஜய் டிவி பெர்சனல் வாழ்க்கையை வைத்து டி.ஆர்.பி-யை ஏற்ற வேண்டாம் என்றும் நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்

Trending

Exit mobile version