தமிழ்நாடு

“சூர்யா அளவுக்காவுது பேசுங்க விஜய்…!”- சீமான் கலாய்

Published

on

சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சினிமா துறையில் இருந்து நேரடியாக தேர்தல் களத்துக்கு வரும் நடிகர்களை விமர்சித்தார்.

பொதுவாக நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்றுப் பேசும் சீமான், அவரையும் விமர்சித்தார். இதனால் கொதிப்படைந்த விஜய் ரசிகர்கள், சீமானுக்கு எதிராக போஸ்டர்களை அச்சடித்து, வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீமான் மீண்டும் பேசியுள்ளார்.

முன்னதாக நிருபர்களுடனான சந்திப்பில் சீமான், ‘இந்த நிலத்தில் மக்களை சந்திக்காமல், அரசியல் செய்யாமல், அரசியல் களத்தில் நிற்காமல் நேரடியாக தேர்தலுக்கு வருவேன் என்று ரஜினி சொல்வதை ஒரு நாளும் ஏற்க முடியாது. தன்மானம் உள்ள எந்தத் தமிழனாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. வரும் தேர்தலில் ரஜினி மற்றும் கமலுக்கு விழும் அடி என்பது, இனி எந்த நடிகனும் தமிழக அரசியலுக்கு வர அச்சப்படும் வகையில் இருக்க வேண்டும்’ என்று ஆவேசமாக பேசினார். அதற்கு ஒரு நிருபர், ‘அனைத்து நடிகர்கள் என்றால், அதில் விஜய்யும் அடக்கமா?’ என்று கேட்டார். ‘அனைவரையும் சேர்த்துதான் சொல்கிறேன்’ என்றார்.

தற்போது விஜய் ரசிகர்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து சீமான், ‘நான் விஜய் அரசியலுக்கு வர வேண்டாம் எனக் கூறவில்லை. மக்களுக்காக களத்தில் இறங்கி போராடிய பின்னர், விஜய் அரசியலுக்கு வரட்டும் என்று மட்டும்தான் சொல்கிறேன்.

விஜய் ரசிகர்கள் என் மீது கோபம் கொண்டிருப்பதாக அறிகிறேன். என் மீது அவர்கள் கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது. குறைந்தபட்சம் நடிகர் சூர்யா அறவுக்காவது விஜய், பொதுப் பிரச்சனைகள் குறித்து குரல் கொடுக்க வேண்டும். மக்களுக்காக களத்தில் நின்று போராடிய பின்னர் தம்பி விஜய் அரசியலுக்கு வரட்டும். அதில் எனக்கு எந்த ஆட்சேபனைகளும் இல்லை’ என்றுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version