சினிமா செய்திகள்

விஜய்சேதுபதியின் ராக்ஸ்டார் ராபர் பாடல் வீடியோ ரிலீஸ்!

Published

on

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சிந்துபாத் படம் வரும் ஜூன் மாதம் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ராக்ஸ்டார் ராபர் என்ற பாடல் யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள சிந்துபாத் படத்தில் இடம்பெற்றுள்ள ராக்ஸ்டார் ராபர் பாடல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த பாடலில் தனது மகன் சூர்யா சேதுபதியுடன் விஜய்சேதுபதி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அப்பாவும் மகனும் சேர்ந்துகொண்டு பிக்பாக்கெட் அடிப்பது போன்ற காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. யுவன் சங்கர் ராஜா இசையில், ராக்ஸ்டார் ராபர் பட்டையை கிளப்புகிறது.

seithichurul

Trending

Exit mobile version