விமர்சனம்

விஜய்சேதுபதியின் ’96’ திரை விமர்சனம்!

Published

on

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த சி. பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள ‘96’ படம் வரும் அக்டோபர் 4ம் தேதி ரிலீசாகிறது. படம் ரிலீசுக்கு முன்னரே ப்ரஸ் ஷோ போடப்பட்டதால், படத்தின் விமர்சனம் இதோ..

ஒளிப்பதிவாளரான சி. பிரேம் குமார், கடந்த வருடம் ’எய்தவன்’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநரானார். இப்படத்தில், மெட்ராஸ் கலையரசன் நாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது, விஜய்சேதுபதியை வைத்து 96 படத்தை இயக்கியுள்ளார்.

காதல் ததும்பும் ’96’

பள்ளிப் பருவத்தில் வரும் முதல் காதலை மீண்டும் ஒருமுறை அந்தப் பழைய டைரியை திருப்பிப் பார்த்தால், அதன் ஞாபகம் நெஞ்சில் ஏதோ மாயம் செய்யும். அப்படி ஒரு படமாக 96 படம் உருவாகியுள்ளது.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்குப் பிறகு த்ரிஷா கம்பேக் என்று சொல்லும் அளவிற்கு, தனது நடிப்பால் ஒவ்வொரு காட்சியிலும் தனது மெச்சூரிட்டியான ஸ்க்ரீன் பிரசென்ஸை பாடமாக நடத்துகிறார்.

இளம் வயது விஜய்சேதுபதியாக எம்.எஸ். பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நல்ல தேர்வு. இளம் வயது த்ரிஷாவாக அறிமுகமாகியுள்ள கெளரி, புதுப் பெண் மாதிரியே தெரியவில்லை. சிறப்பான நடிப்பால், கைதட்டல் வாங்குகிறார். மேலும், நண்பர்களாக வரும் தேவதர்ஷினி மற்றும் ஆடுகளம் முருகதாஸ் காமெடியில் கலக்குகின்றனர்.

கதைக் கரு:

1996ஆம் ஆண்டுப் பள்ளியில் படிக்கும் இரு மாணவர்களுக்கிடையே ஏற்படும் நட்பு முதல் காதலாக மாறுகிறது. ஆனால், வழக்கம் போல, ஒரு கட்டத்தில் அது பிரிகிறது.

இருவரும் வேறு வேறு வாழ்க்கையில் பயணிக்கின்றனர். விஜய்சேதுபதி, புகைப்படக் கலைஞராக உள்ளார். இந்நிலையில், இவர்களின் நண்பர்களான தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ் பள்ளி ரீ- யூனியனுக்குத் தயார் செய்கின்றனர். அதில், மீண்டும் சந்திக்கும் விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா இடையே நடைபெறும் உணர்ச்சி போராட்டம் தான் படத்தின் கதை.

ஆக்‌ஷன் காட்சிகள், குத்துப் பாடல்கள் இல்லாமல், அழகான காதல் படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், பழைய பள்ளிப் பருவ நாட்களை மீண்டும் பார்க்க வேண்டும் என ஆசைப்படுபவர்கள் நிச்சயம் ‘96’ படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம்!

seithichurul

Trending

Exit mobile version