தமிழ்நாடு

முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கை வைத்த விஜய்சேதுபதி!

Published

on

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதை அடுத்து இன்று காலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க திமுக தலைவர் ஸ்டாலின் உரிமை கோரினார். இதனையடுத்து சற்றுமுன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியானது.

இந்த நிலையில் வரும் 7ஆம் தேதி திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் முக ஸ்டாலின் அவர்களுக்கு திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி, வெற்றி மாறன் உள்ளிட்ட 67 பேர் வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் அவர்கள் 14 கோரிக்கைகள் வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஸ்டெர்லைட், எட்டுவழிச்சாலை, கூடங்குளம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகாண அந்த கடிதத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version