சினிமா

சீரியல் நடிகருக்கு வீடியோ காலில் வாழ்த்து சொன்ன விஜய் சேதுபதி – வீடியோ

Published

on

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் நவீன். இந்த சீரியல் காரணமாக இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடினார்.

எனவே, இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வீடியோ மூலமாகவும், மெசேஜ் மூலமாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்து போன நவீன் கண்ணீரை அடக்க முடியவில்லை என பதிவிட்டுள்ளார்.

அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி செல்போன் மூலம் வீடியோ காலில் பேசி வாழ்த்து தெரிவித்தார் ‘சூப்பரா பண்றடா. வாழ்த்துக்கள்’ என அவர் நவீனுக்கு வாழ்த்து கூறினார். இந்த வீடியோவை நவீன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

 

 

seithichurul

Trending

Exit mobile version