சினிமா செய்திகள்

மீண்டும் அஞ்சலியுடன் ஜோடி சேர்ந்த விஜய்சேதுபதி!

Published

on

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் சிந்துபாத்.

இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்ட விஜய்சேதுபதி, வரும் மார்ச் 11ம் தேதி படத்தின் டீஸர் வெளியாகும் என்ற அறிவிப்பையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இறைவி படத்திற்கு பிறகு, மீண்டும் அஞ்சலியுடன் விஜய்சேதுபதி ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தொடர்ந்து வெற்றி பாடல்களை கொடுத்து வரும் யுவனின் இசையில், சிந்துபாத் படத்திலும் அருமையான பாடல்கள் அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் இசைவெளியீட்டு விழாவும் சென்னையில் விரைவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version