சினிமா செய்திகள்

சிந்துபாத்தாக மாறிய விஜய்சேதுபதி!

Published

on

நடிகர் விஜய்சேதுபதியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் விஜய்சேதுபதிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை கொட்டித் தீர்த்தனர். அவர்களுக்கு ட்விட்டரில் அன்பு முத்தங்களோடு விஜய்சேதுபதியும் நன்றி தெரிவித்தார்.

மேலும், தான் அடுத்து நடிக்கவுள்ள சிந்துபாத் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் விஜய்சேதுபதி வெளியிட்டார்.

அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில், சீனர்கள் துரத்தி வர, மழையில் சண்டைப் போட தயாராக விஜய்சேதுபதி நிற்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ராஜபாண்டியாக விஜய்சேதுபதி நடித்துள்ள கேரக்டர் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு விஜய்சேதுபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை அந்த படக்குழு தெரிவித்தது.

ஜனவரி 16, 1978ம் ஆண்டு ராஜபாளையத்தில் பிறந்த ஒரு சாமனியன் புதுப்பேட்டை படத்தில் சைடு ரோலில் நடித்து, பேட்ட படத்தில் ரஜினியுடன் சமமாக திரையை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு உயர்ந்துள்ளான். இன்னும் சிகரங்கள் அடைய வாழ்த்துகள்!

author avatar
seithichurul

Trending

Exit mobile version