சினிமா செய்திகள்

திருநங்கைகளுக்கு கைகொடுத்த விஜய்சேதுபதி!

Published

on

சுதந்திர தினத்தன்று திருநங்கைகள் செய்ய இருந்த கின்னஸ் சாதனையை தொடங்கிவைத்தார் நடிகர் விஜய்சேதுபதி.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய்சேதுபதி தான் அந்த வேடத்தில் நடிக்கும் போது அவர்களின் கஷ்டத்தை உணர்ந்ததாகவும் அவர்களது வாழ்க்கையைப்பற்றி அறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி கோபாலபுர மைதானத்தில் திருநங்கைகள் 100 பேர் 7000 சதுரடியில் அம்பேத்கர் உருவப்படத்தை வரைந்தனர். இந்த சாதனையை நடிகர் விஜய்சேதுபதி தொடங்கிவைத்தார்.

தொடக்கவிழாவில் பேசிய அவர் ஆண், பெண் ஆகியோர்க்கு இருக்கும் எல்லா உரிமையும் திருநங்கைகளுக்கும் உண்டு அவர்களை ஒதுக்குவதும் அவமதிப்பதும் சமூக குற்றம், திருநங்கைகளை மதிக்கும் சமுதாயம் உருவாகி வருகிறது. இதுபோல் பல சாதனைகள் புரிய வேண்டும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version