சினிமா செய்திகள்

பாலிவுட்டில் கத்ரினா கைஃப் உடன் ஜோடி சேரும் நடிகர் விஜய் சேதுபதி..!

Published

on

நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்து பாலிவுட் திரைப்படங்கள், வெப் சீரிஸ் என அங்கேயும் படு பிஸியான நடிகர் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதி புதிதாக பெயர் அறிவிக்கப்படாத பாலிவுட் படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். இந்தப் படம் ஹிந்தியில் ஹிட் அடித்த அந்தாதுன் பட இயக்குநரின் படம் ஆகும். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி சேர நடிகை கத்ரினா கைஃப் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் மிகவும் பிஸியான நடிகனாக வலம் வருகிறார் விஜய் சேதுபதி.

நாயகன் கதாபாத்திரம் மட்டுமின்றி எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும் கதை பிடித்திருந்தால் நடிக்க ஒப்புக் கொள்கிறாராம் விஜய் சேதுபதி. ஹிந்தியில் ஏற்கெனவே ‘மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன ‘மும்பைக்கார்’ என்ற படத்திலும் தற்போது சேதுபதி நடித்து வருகிறார். பொங்கலுக்கு மாஸ்டர் வெளி வர உள்ள நிலையில் ப்ரோமோஷன், நாடு முழுவதும் பல நகரங்களில் மாறி மாறி ஷூட்டிங், தயாரிப்புப் பணிகள் என கலக்கி வருகிறார்.

Trending

Exit mobile version