சினிமா செய்திகள்

முனிஸ்காந்த் கதாபாத்திரத்தை ஹிந்தியில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி..?

Published

on

தமிழில் வெளியான மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக் மூலம் பாலிவுட் பட உலகில் நடிகர் விஜய் சேதுபதி அறிமுகம் ஆகிறார்.

தமிழில் மாநகரம் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். ஹிந்தியில் இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார். ஹிந்தியில் இந்தப் படத்துக்கு மும்பைக்கார் எனப் பெயர் வைத்துள்ளனர். பாலிவுட்டில் அமீர்கான் படம் மூலம் அறிமுகம் ஆகவிருந்த விஜய் சேதுபதி தற்போது அந்தப் படத்திலிருந்து விலகிய காரணத்தால் மும்பைக்கார் மூலம் அறிமுகம் கொடுக்கிறார்.

மாநகரம் படத்தில் காமெடியன் ஆக முனிஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில்தான் தற்போது ஹிந்தி மும்பைக்கார் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version