சினிமா செய்திகள்
விக்னேஷ் சிவன் படத்துக்காக உடல் எடையைக் குறைத்த விஜய் சேதுபதி..!
![vijay sethupathi (1) - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/vijay-sethupathi-1.jpg)
நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தில் நாயகிகளாக நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். விக்னேஷ் சிவனின் இந்தத் திரைப்படத்துக்காக வாலிப காதல் பையனாக உருமாறி வருகிறார் விஜய் சேதுபதி. கடுமையான உணவுக் கட்டுப்பாடு மூலம் எடையைக் குறைத்து வருகிறாராம் விஜய் சேதுபதி.
இதேபோல் தான் தனது உடலை 15 கிலோ வரையில் விக்னேஷ் சிவனின் ‘நானும் ரெளடிதான்’ திரைப்படத்துக்காக விஜய் சேதுபதி குறைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக இரண்டு பெரிய லேடி சூப்பர்ஸ்டார்களான நயன்தாராவும் சமந்தாவும் இத்திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.