சினிமா செய்திகள்

வைரலாகும் விஜய்சேதுபதி, ஷாரூக்கான் புகைப்படம்!

Published

on

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ஆரண்ய காண்டம் தேசிய விருதை தட்டிச் சென்றது. அடுத்து பல ஆண்டுகள் கழித்து அவர் இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படம் பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியானது.

ஆனால், சில பல சர்ச்சை காட்சிகள் படத்தில் இடம்பெற்றதால், சூப்பர் டீலக்ஸ் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

தற்போது, மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து இப்படம் விருதுக்கும் தேர்வானது. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம் ஆகிய மூன்று பிரிவுகளில் இப்படம் தேர்வாகியுள்ளது. அதுமட்டுமன்றி விருதைத் தேர்ந்தெடுக்கும் நடுவர்கள், இப்படத்தைப் பற்றி பெருமையாகவும் பேசியுள்ளனர். இதன் விருது வழங்கும் விழா, மெல்போர்னில் நடந்து வருகிறது.

அந்த விருது விழாவில் பங்கேற்றபோது, விஜய்சேதுபதியும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் சந்தித்து கொண்டனர்.

ஏற்கனவே விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை ஷாருக்கான் பெற்றிருப்பதால், விஜய்சேதுபதி அவருக்கு மிகவும் பரீட்சையமானவர் என்பதால், இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. விஜய்சேதுபதியுடன் படத்தில் நடித்த நடிகை காயத்ரி மற்றும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவும் உடனிருந்தனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version