சினிமா செய்திகள்

மாஸ்டர் பட ‘பவானி’ விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்..!

Published

on

பவானி என்னும் கதாபாத்திரத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளதை வெகுவாகப் பாராட்டி உள்ளார் சூப்பர் ஸ்டார் ஒருவர்.

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மக்களைக் கவர்ந்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நக்கலான வசனங்கள், பந்தா நடை, குலுங்கி குலுங்கி ஆடிய விதம் என அத்தனையும் வில்லத்தனைத்தையும் தாண்டி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. மாஸ்டர் படத்தைப் பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிகர் விஜய் சேதுபதியை பயங்கரமாகப் பாராட்டி உள்ளார்.

விஜய் சேதுபதி தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆனதே சிரஞ்சீவி படத்தில் தான். சிரஞ்சீவியின் ‘சயிரா நரசிம்ம ரெட்டி’ என்னும் படத்தில் தான் கெளரவ தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருப்பார். இதன் பின்னர் இரண்டாவது தெலுங்கு படமான ‘உப்பென்னா’ வருகிற பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகிறது. இதிலும் விஜய் சேதுபதி வில்லன் ஆகவே நடித்துள்ளார்.

உப்பென்னா படத்தில் ‘ப்ரீ-ஷோ’ நிகழ்ச்சியில் நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டு பேசினார். அப்போது சிரஞ்சீவி கூறுகையில், “விஜய் சேதுபதி மீது நான் காதலில் விழுந்து விட்டேன். அவரையும் அவரது நடிப்பையும் எனக்கு அவ்வளவு பிடித்துள்ளது. இந்தியாவிலேயே பல திறன் கொண்ட நடிகர்களுள் ஒருவராக விஜய் சேதுபதி உள்ளார். சமீபத்தில் அவரது ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் பவானி கதாபாத்திரம் என்னைக் கவர்ந்துவிட்டது” எனக் குறிப்பிட்டார்.

seithichurul

Trending

Exit mobile version