சினிமா செய்திகள்

பைக்கில் ஹாயாக ஊர் சுற்றிப் பார்த்த விஜய் சேதுபதி..!- வைரல் வீடியோ

Published

on

நடிகர் விஜய் சேதுபதி நண்பர் ஒருவருடன் இணைந்து ஹாயாக சாலைகளில் பைக் ரைடு சென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிப் படங்களில் பிஸி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கிடைக்கும் இடைவேளைகளில் பல புது திறமையாளர்களுக்கு உதவுதல், கடை திறப்பு, பட போஸ்டர் வெளியீடு என தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறார்.

அப்படி கிடைத்த இடைவேளை ஒன்றில் நண்பர் ஒருவரின் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு விஜய் சேதுபதி பைக் ரைடு செய்துள்ளார். முகக்கவசம், ஹெல்மெட் என இல்லாமல் இரவு நேரத்தில் யாரும் இல்லாத சாலைகளில் விஜய் சேதுபதி செய்த பைக் பயணம் வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது மாமனிதன், காத்து வாக்குல ரெண்டு காதல், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், இடம் பொருள் ஏவல் எனப் படங்கள் வரிசையாக வெளியீட்டுக்குக் காத்து இருக்கின்றன. இதுபோக அரை டஜன் படங்களில் கெளரவ தோற்றம், 2 மலையாளம், 3 தெலுங்கு, 1 கன்னடம், 2 ஹிந்தி, 2 வெப் சீரிஸ் படங்கள் என செம பிஸியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

seithichurul

Trending

Exit mobile version