சினிமா செய்திகள்

கோமாளி 4வது லுக்கை வெளியிட்ட விஜய்சேதுபதி!

Published

on

ஜெயம்ரவியின் 24வது படமான கோமாளி படத்தின் 4வது லுக்கை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

ஐசரி கணேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி உள்ள கோமாளி படத்தில் 9 கெட்டப்புகளில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 3 தினங்களுக்கு முன்னால் வெளியான நிலையில், தினமும் ஒரு லுக்கை படக்குழு வெளியிட்டு வருகிறது.

முதல் லுக்கில் மனநோயாளி லுக்கில் உள்ள ஜெயம் ரவி, அடுத்த லுக்கில் ஹீரோ போல உள்ளார். நேற்று வெளியான மூன்றாவது லுக்கில் ஆதிவாசி மனிதனாக வந்த ஜெயம்ரவி, இன்று வெளியிடப்பட்டுள்ள 4வது லுக்கில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடும் போராளியாக உள்ளார்.

பல்வேறு காலக்கட்டத்தை சொல்லும் படமாக கோமாளி உருவாகி வருவதால், இது டைம் டிராவல் சம்பந்தப்பட்ட படமா அல்லது, இந்த கெட்டப்புகள் சில சீன்களுக்கு மட்டுமே வருமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version