சினிமா செய்திகள்

சேதுபதி 2-க்கு தயாராகும் விஜய்சேதுபதி!

Published

on

அருண்குமார் இயக்கத்தில் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை தொடர்ந்து, விஜய்சேதுபதி நடிப்பில் சிந்துபாத் ரிலீசுக்கு ரெடியாகி விட்டது.

இந்நிலையில், இந்த வெற்றிக் கூட்டணி சேதுபதி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தயாராகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான சேதுபதி படத்தில் கம்பீரமான போலீசாகவும், குடும்ப தலைவனாகவும் விஜய்சேதுபதி மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இரண்டாம் பாகத்தில் மேலும் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் அமைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேதுபதி 2ம் பாகத்தில் விஜய்சேதுபதி நடித்தால், அவர் நடிக்கும் முதல் இரண்டாம் பாகம் படமாகவும் இது விளங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version