சினிமா செய்திகள்

மு.க.ஸ்டாலினின் ’65 நாள் ஆட்சி’ எப்படி?- விஜய் சேதுபதி கொடுத்த சான்றிதழ்

Published

on

தமிழ்நாடு முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி பதவியேற்றார். அவரது ஆட்சி இரண்டு மாதங்களைக் கடந்துள்ள நிலையில் அது குறித்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து கூறியுள்ளார்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி கொடுக்கும் போது, ‘ஸ்டாலினின் 65 நாள் ஆட்சியை எப்படி பார்க்கிறீங்க?’ எனக் கேட்டதற்கு,

விஜய் சேதுபதி சொன்ன பதில், ‘ரொம்ப பிடிச்சிருக்கு. நான் அவர் சமீபத்தில நேர்ல சந்திச்சுப் பேசுனேன். அப்பவும் சார், ரொம்ப நல்லா ஆட்சிப் பண்ணிட்டு இருக்கீங்கன்னு சொன்னேன்.

நான் மட்டுமில்ல, என் கூட வேலை செய்யுற ஆட்கள், என் டிரைவர், என் அசிஸ்டென்ஸுனு எல்லார் கிட்டயும் ஆட்சி எப்படி இருக்குனு தொடர்ச்சியா கேட்டுட்டே இருக்கேன்.

யாருமே இதுவரை குறை சொல்லல. இப்படி குறை சொல்லாத ஆட்சியை அவர் கொடுத்திட்டு இருக்காரு’ என்று புகழாரம் சூட்டினார்.

சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முதல்வரை நேரில் சந்தித்து நிவாரண நிதியை விஜய் சேதுபதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version