சினிமா

நான் இல்லை என் அட்மின் தான் பதிவிட்டார்: எச்.ராஜாவை கிண்டலடித்த விஜய் சேதுபதி!

Published

on

சில மாதங்களுக்கு முன்னர் டுவிட்டரில் சர்ச்சைக்குறிய கருத்தை கூறிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பின்னர் அது நான் பதிவிடவில்லை, என்னுடைய அட்மின் தான் என கூறி சமாளித்தார். இதனையடுத்து சமூக வலைதளத்தில் அட்மின் மீம்ஸ்கள் அதிகமாக வெளியிட்டு அவரை கலாய்த்தனர் நெட்டிசன்கள்.

அதுபோல சில தினங்களுக்கு முன்னர் சர்ச்சைக்குறிய வகையில் எச்.ராஜா பேசிய வீடியோ வெளியானது. அப்போது அது என் குரலே இல்லை, எடிட் செய்துவிட்டார்கள் என கூறி சமாளித்தார். இதுவும் நெட்டிசன்களுக்கு செம தீனியாக அமைந்தது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததாக கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி எச்.ராஜாவின் அட்மின் ட்ரெண்டை கையிலெடுத்து அவரை கலாய்க்கும் விதமாக பேசினார்.

சென்னை சாலிகிராமத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, பேசிவிட்டு நான் பேசவில்லை என்பதும், அட்மின் தான் பதிவிட்டார் என்று சொல்வதுதான் இப்போது ட்ரண்ட். அதுமாதிரி என்னுடைய வீட்டில் ரெய்டு நடக்கவில்லை, என் வீடு போல் செட் போட்டு நடந்திருக்கலாம் என்று சொல்லமாட்டேன்.

வீடு மற்றும் அலுவலகத்திற்கு வருமான வரித்துறையினர் வந்தது உண்மைதான். ஆனால், சோதனை நடைபெறவில்லை. ஆய்வு செய்யத்தான் அதிகாரிகள் வந்தனர். அதுவும், கணக்கு விவகாரத்தில் ஆடிட்டர் செய்த சிறு குழப்பத்தினால் வந்த விளைவுதான் இது. குழப்பம் நீங்கியதும் அதிகாரிகள் சென்றுவிட்டனர் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version