சினிமா
படமே ரிலீஸ் ஆகல!.. மீண்டும் அந்த இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி…
காக்கா முட்டை திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மணி கண்டன். 2 சிறுவார்கள் பீசா சாப்பிட எடுக்கும் முயற்சி, அதை சுற்றி நடக்கும் சம்பவங்களை ரசிக்கும் படி திரைக்கதை அமைந்திருந்தார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பாக நடித்திருந்தார். இப்படம் அவருக்கு நல்ல துவக்கமாக அமைந்திருந்தது. இப்படம் விருதுகளையும் குவித்தது.
அப்படத்திற்கு பின் விஜய் சேதுபதியை வைத்து ஆண்டவன் கட்டளை திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது. அதன்பின் ‘கடைசி விவசாயி’ படத்தை இயக்கினார். இப்படத்திலும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், இப்படம் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து அவர் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளாராம். மணிகண்டன் கூறிய கதை விஜய் சேதுபதிக்கு பிடித்துப்போக விரைவில் இணைவோம் என கூறியுள்ளாராம். ஆனால், தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடித்து வருவதால் எப்போது மணிகண்டனுடன் இணைவார் என தெரியவில்லை. மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடைசி விவசாயி திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.