சினிமா

”வேற மாதிரி ஆகிடும் விஜய்சேதுபதி” சிம்பு ரசிகர்கள் பேனர் வைத்து மிரட்டல்!

Published

on

செக்கச் சிவந்த வானம் படத்தின் கிளைமேக்ஸில், எத்தி கேரக்டரில் வரும் கேங்ஸ்டர் சிம்புவை, போலீஸ் ரசூல் கேரக்டரில் நடித்த விஜய்சேதுபதி கொல்லும் கிளைமேக்ஸ் சஸ்பென்சை போட்டு உடைத்துள்ளனர் சிம்புவின் தீவிர ரசிகர்கள். இதனால், மணிரத்னம் உள்படப் படக்குழுவே அதிர்ச்சி அடைந்துள்ளது.

”எனக்கு ஒன்னுனா விட்ருவேன் எஸ்டிஆருக்கு ஒன்னுனா வேற மாதிரி ஆயிரும்..” என்றும், விஜய்சேதுபதி ரசிகர் மன்றங்களைக் கண்டிக்கிறோம் என்றும் பேனர்களை அடித்து, அதனைச் சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். சிம்பு ரசிகர்களுக்கு விஜய்சேதுபதி ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இரு நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கு இடையிலான இந்த ஈகோ போட்டியில், மணிரத்னம் படத்தின் மர்ம ரகசியம் வெளிச்சத்திற்கு வந்ததது தான் மிச்சம்.

Trending

Exit mobile version