சினிமா செய்திகள்

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: இணையத்தில் வைரல்

Published

on

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் நாலைந்து திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன என்பதும் தெரிந்ததே. இந்த படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆனார் என்பதைப் பார்த்தோம். இந்த படத்தில் அவர் மாநகரம் படத்தில் முனிஷ்காந்த் நடித்த கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வருகிறார் என்பதும் இந்தப் படத்தின் முக்கிய கேரக்டர்களில் விக்ராந்த் மாஸ்ஸே மற்றும் தன்யா மனிக்தலா ஆகியோர் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மும்பைகார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அட்டகாசமான விஜய்சேதுபதியின் லுக் மற்றும் இந்த படத்தில் நடித்தவர்களின் புகைப்படங்கள் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் உள்ளன என்பதும், இந்த இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் பிரசாந்த் பிள்ளை இசையில் உருவாகி வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version