சினிமா செய்திகள்

விஜய்சேதுபதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி: இந்த படமாவது தேறுமா?

Published

on

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் ஒரு டஜனுக்கும் அதிகமான படங்களில் நடித்து வந்தார் என்பதும் அவர் நடித்த ’லாபம்’ ’துக்ளக் தர்பார்’ மற்றும் ‘அனபெல் சேதுபதி ஆகிய மூன்று திரைப்படங்கள் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சமீபத்தில் வெளியான இந்த மூன்று திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது விஜய்சேதுபதிக்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள கடைசி விவசாயி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், காத்துவாக்குல 2 காதல் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

இந்த நிலையில் விஜய் சேதுபதி தயாரித்து நடித்த ’முகில்’ என்ற திரைப்படம் அக்டோபர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, ரெஜினா உள்பட பலர் நடித்துள்ளனர்.

வெறும் 62 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த படம் இந்த படமாவது விஜய்சேதுபதிக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version