சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ சிங்கில் ரிலீஸ் தேதி அறிவிப்பு: அப்பா-மகன் இணைந்து கொடுக்கும் விருந்து!

Published

on

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் ‘மாமனிதன்’. பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய இந்த திரைப்படம் அந்த ஆண்டே ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதிகள் பலமுறை அறிவிக்கப்பட்டும் ரிலீசாகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவான இந்த படத்தை ரிலீஸ் செய்ய அவர் பெரும் முயற்சி செய்து வருகிறார் என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘மாமனிதன்’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த பாடலை தனது தந்தை இளையராஜா மற்றும் தானும் இணைந்து கம்போஸ் செய்துள்ளதாகவும் இந்த இசை விருந்தை கேட்க அனைவரும் தயாராக இருங்கள் என்றும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து இந்த பாடலை பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சேதுபதி ஜோடியாக காயத்ரி என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் அவர் ஏற்கனவே விஜய் செய்திகளுடன் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version