சினிமா செய்திகள்
லாபம் படத்திற்காக பயங்கர கெட்டப்பில் விஜய்சேதுபதி!
எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள லாபம் படத்தில் இடம்பெற்றுள்ள பயங்கர கெட்டப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ஈ, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடைமை போன்ற படங்களை இயக்கிய ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் லாபம்.
இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுருதிஹாசன் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு இரண்டு கெட்டப்புகள். ஒன்று முறுக்கு மீசை வைத்துக் கொண்டு ஸ்ருதிஹாசனை காதலிக்கும் இளைஞன், மற்றொரு கெட்டப், நீண்ட தாடி மற்றும் முடியுடன் படுபயங்கரமாக இருக்கிறது.
இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தொடர்ந்து விஜய்சேதுபதிக்கு பெரிய வெற்றி படங்கள் கிடைக்காத நிலையில், லாபம் படமாவது நல்ல லாபத்தை தரும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். அவரது ஆசை நிறைவேறுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.