சினிமா செய்திகள்

ரூ.100 கோடி வசூலைக் குவித்த விஜய்சேதுபதி படம்!

Published

on

தெலுங்கு சினிமாவில் நடிகர் விஜய்சேதுபதி, வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த ‘உப்பன்னா’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வாரிக் குவித்துள்ளதாம்.

தற்போதைய தென்னிந்திய சினிமா உலகில் அதிகம் பேசப்படும் நபராக இருப்பவர் விஜய்சேதுபதிதான். மாஸ்டர் படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பால் விஜய் சேதுபதியின் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் அவர் வில்லனாக நடித்து தெலுங்கில் உப்பன்னா என்ற திரைப்படம் வெளியாகி மெகாஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பை சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் உள்பட ஏராளமான முன்னணி நடிகர்கள் பாராட்டி வருகின்றனர். தறபோது இந்த திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலைக் குவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உப்பன்னா படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதற்கான அனைத்து அம்சங்களும் உப்பன்னா படத்தில் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்த திரைப்படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. ரீமேக் படங்களிலும் விஜய் சேதுபதியே வில்லனாக நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version