சினிமா

விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்….பரபர அப்டேட்…

Published

on

சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வினோத். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். அடுத்து கார்த்தியை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று.

வட மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்து கொடூரமாக கொலை செய்து கொள்ளை அடிக்கும் கும்பலை பற்றிய கதை. இப்படத்திற்காக சுமார் ஒரு வருடத்திற்கும் மேல் அவர் தகவல்களை சேகரித்தார். இப்படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது.

vinod

இப்படத்திற்கு அவர் அஜித்தை வைத்து இயக்கி திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படம் பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடித்த Pink படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் வழக்கறிஞராக அஜித் நடித்திருந்தார். அஜித்தை வித்தியாசமாக காட்டியிருந்தார் வினோத். இப்படத்தை போனிகபூர் தயாரித்திருந்தார். இப்படமும் வெற்றி பெற்றது.

அதன்பின் இதே கூட்டணி வலிமை படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத்தே இயக்கவுள்ளார்.

இந்நிலையில், அந்த படத்தை முடித்துவிட்டு விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை வினோத் இயக்கவுள்ளாராம்.

Trending

Exit mobile version