சினிமா
மஞ்சு வாரியருக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதி: மலையாளத்தில் அறிமுகம்!
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக தற்போது வலம் வருகிறார். அடுத்தடுத்து தொடர்ந்து வெளியாகும் அவரது படங்கள். அனைத்தும் வெற்றிப்படங்கள் என விஜய் சேதுபதி ஏறுமுகமாகவே உள்ளார். அவரை வைத்து படம் எடுக்க பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் போட்டா போட்டி போடுகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் நீண்ட நாள் ஆசையாக மலையாளம் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் அங்கு மஞ்சு வாரியர் விஜய் சேதுபதியை விட பெரிய ஸ்டார். மேலும் நடிகர் ஜெயராம் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க உள்ளார்.
இதுவரை தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிக்காத ஒரு வித்தியாசமான கேரக்டரில் மலையாள அறிமுக சினிமாவில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநர் சனில் கலதில் இயக்கும் மார்கோனி மாதாயி திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர்.