சினிமா செய்திகள்

விமான நிலையத்தில் விஜய்சேதுபதியை எட்டி உடைத்த மர்ம நபர்: வீடியோ வைரல்!

Published

on

நடிகர் விஜய் சேதுபதி விமான நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் இருந்து வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென எட்டி உதைத்த சம்பவத்தின் வீடியோவை இணையதளங்களில் வைரலாகி வருகிறது

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்பதும் இவர் நடித்த சுமார் அரை டஜன் படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், விடுதலை உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் அவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் விஜய் சேதுபதி தனது சகாக்களுடன் விமான நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது வெள்ளை சட்டை அணிந்த மர்ம நபர் ஒருவர் திடீரென விஜய்சேதுபதியை பின்னால் இருந்து எட்டி உதைக்கும் காட்சியின் வீடியோ வைரலாகி வருகிறது

அந்த நபரை விஜய் சேதுபதியின் பாதுகாவலர்கள் பிடித்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிகிறது. விஜய் சேதுபதியை தாக்கக் கூடிய அளவுக்கு அந்த நபருக்கு அவர் மீது என்ன கோபம் என்பது தெரியவில்லை.

https://twitter.com/Vijayar50360173/status/1455858068172914697

Trending

Exit mobile version