சினிமா செய்திகள்

ஹிந்தி வெப் சீரிஸ்… ஹீரோ சாகித் கபூரை விட வில்லன் விஜய் சேதுபதிக்கு அதிக சம்பளம்..!

Published

on

ஹிந்தி வெப் சீரிஸ் ஒன்றில் ஹீரோ சாகித் கபூரை விட வில்லன் கதாபாத்திரத்தில் கமிட் ஆகியிருக்கும் விஜய் சேதுபதிக்கு அதிக சம்பளமாம். இதை ஒட்டுமொத்த பாலிவுட் மீடியாவும் பரபரப்பு செய்தியாக்கி வருகின்றன.

ஹிந்தியில் அமேசான் தளத்தில் நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா ஆகியோரது நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த ‘தி ஃபேமிலி மேன்’ என்னும் வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே ஆகியோர் இணைந்து புதிதாக ‘சன்னி’ என்னும் வெப் சீரிஸ் தொடரை இயக்க உள்ளனர்.

இந்த வெப் சீரிஸில் நாயகன் ஆக நடிகர் சாகித் கபூர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சாகித் கபூருக்கு வில்லன் ஆக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். நாயகி ஆக முதலில் ‘மாஸ்டர்’ பட நடிகை மாளவிகா மோகனன் நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது நடிகை ராஷி கண்ணா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த வெப் சீரிஸின் முதல் சீசனில் மட்டும் நடித்துக் கொடுக்க நடிகர் சாகித் கபூருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் ஆகப் பேசப்பட்டுள்ளது. ஆனால், வில்லன் விஜய் சேதுபதிக்கு சம்பளம் 55 கோடி ரூபாயாம். இதனால் பாலிவுட் வட்டாரமே திகைத்துப் போயுள்ளதாம்.

seithichurul

Trending

Exit mobile version