சினிமா செய்திகள்

மீண்டும் விஜய்சேதுபதிக்கு ஜோடியான பிக்பாஸ் ஷிவானி: வைரல் புகைப்படம்!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்க ஷிவானி நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் வீட்டில் சிங்க பெண்ணே என்ற பட்டத்துடன் வெளியே வந்த ஷிவானி நாராயணனுக்கு பட வாய்ப்புகள் குவிந்த போதிலும் அவர் தனக்கு பொருத்தமான கதைகளில் மட்டும் நடிக்க முடிவு செய்தார். இதனை அடுத்து கமல்ஹாசன் ’விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தபோது அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொண்டார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் 46வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் பொன்ராம் இயக்க உள்ள நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ஷிவானி ஒப்பந்தமாகி உள்ளார்.

இயக்குனர் பொன்ராம் உடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ள ஷிவானி நாராயணன், ‘இயக்குனர் பொன்ராம் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி’ என்று கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி நடிக்கும் இரண்டு படங்களில் தொடர்ச்சியாக ஷிவானி நாராயணன் ஒப்பந்தமாகி இருப்பது கோலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version