சினிமா

ட்விட்டர் டாப் 10ல் இடம் பிடித்த விஜய்!

Published

on

2018ம் ஆண்டில் ட்விட்டர் இந்தியாவில் அதிகம் பேரால் பிரபலமாக பேசப்பட்டவர்களின் டாப் 10 பட்டியலில் நடிகர் விஜய் இடம்பிடித்துள்ளார்.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

மூன்றாவது இடத்தில் அமித்ஷாவும், நான்காவது இடத்தில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், ஐந்தாவது இடத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இடம்பிடித்து உள்ளனர்.

இவர்களை தொடர்ந்து, தெலுங்கு நடிகர் பவர் ஸ்டார் 6வது இடத்தில் உள்ளார். பாலிவுட் பாட்ஷா ஷாரூக் கான் 7வது இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் ஒரே தமிழ் நடிகரான விஜய் 8ம் இடத்தை பிடித்துள்ளார். ரஜினியின் மேக்னம் ஓபஸ் படமான 2.0, காலா போன்ற படங்கள் மற்றும் அரசியல் அறிவிப்பு உள்ளிட்டவை வெளியான நிலையிலும், அவரது பெயர் இடம் பெறவில்லை.

9வது இடத்தில் மகேஷ் பாபுவும், 10வது இடத்தில் சிவ்ராஜ் சவுகனும் உள்ளனர்.

மேலும், இந்திய அளவில் டிரெண்டான ஹேஷ்டேக் பட்டியலில் விஜய்யின் சர்கார் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் மீடூ ஹேஷ்டேக் உள்ளது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version