சினிமா செய்திகள்

கேரளாவில் சூப்பர் ஸ்டார்களை பின்னுக்கு தள்ளிய தளபதி விஜய்!

Published

on

தமிழ் திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய் இருந்தாலும், அதிக வசூல் செய்யும் படங்களில் விஜய் தான் முதலிடத்தில் உள்ளார் என்பதும் ரஜினி அடுத்த இடத்தில் தான் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய்யின் படங்கள் மிகப்பெரிய வசூலை குவித்து வருகிறது என்பதும் சமீபத்தில் வெளியான ’மாஸ்டர்’ திரைப்படம் கிட்டத்தட்ட 400 கோடி அளவில் வசூல் செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவிலும் அம்மாநில சூப்பர் ஸ்டார்களை பின்னுக்கு தள்ளிவிட்டு விஜய் வசூல் அளவில் சாதனை செய்துள்ளார். கேரளாவில் சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோரிடையே தான் கடந்த பல ஆண்டுகளாக போட்டி இருந்தது. இருவரது திரைப்படங்களும் அதிக வசூல் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பிரித்விராஜ், பகத் பாசில், நிவின் பாலி போன்ற திறமையான நடிகர்கள் மலையாள திரையுலகினர் உள்ளனர் என்பதும் அவர்களுடைய படங்களும் நல்ல வசூல் செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விஜய்யின் படங்கள் கேரளாவில் வசூலில் புதிய சாதனை செய்து வருகிறது. தமிழகத்தை போலவே கேரளாவிலும் விஜய்க்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருப்பதால் விஜய் படங்கள் வெளியாகும் தினத்தில் கேரளாவில் திருவிழா போன்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் போட்டி என்பது விஜய்க்கும் மோகன்லாலுக்கும் இடையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் வசூலில் முதல் 5 இடங்களைப் பிடித்த படங்களில் விஜய் நடித்த படங்கள் இரண்டு உள்ளன என்பதும் இதன் மூலம் கேரளாவிலும் தளபதி விஜய் சாதனை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version