சினிமா செய்திகள்

தளபதி 63 படப்பிடிப்பில் அடிபட்ட ஊழியரை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்த விஜய்!

Published

on

சென்னை அடுத்து பூந்தமல்லி அருகே உள்ள இவிபி ஃபிலிம் சிட்டியில் விஜய்யின் தளபதி 63 படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

நேற்று இரவு ஷூட்டிங்கின் போது, 100 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்த ஃபோகஸ் லைட் எதிர்பாராதவிதமாக விழுந்ததில், கீழே நின்று கொண்டிருந்த மின் ஊழியர் செல்வராஜ் மீது அது விழுந்ததில் செல்வராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக படக்குழுவினர் செல்வராஜை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், அனுமதித்தனர். இந்நிலையில், இந்த செய்தியை அறிந்த விஜய், மருத்துவமனைக்கு நேரில் சென்று செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அவருக்கான மருத்துவமனை செலவையும் விஜய் ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version