தமிழ்நாடு

விஜய் மக்கள் இயக்கத்தின் 3 வேட்பாளர்கள் வெற்றி: சென்னையில் நூலிழையில் பெண் வேட்பாளர் தோல்வி!

Published

on

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த மூன்று வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இரண்டு தனித்தனி கூட்டணிகளாகவும் பாஜக தனித்தும் போட்டியிட்டது. இதனையடுத்து மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்கள் சுயேச்சை சின்னங்களில் ஒரு சில தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டனர். இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த மூன்று வேட்பாளர்கள் இதுவரை வெற்றி பெற்றுள்ளதாகவும் சென்னையில் அறிவுச் செல்வி என்ற வேட்பாளர் நூலிழையில் தோல்வி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்களின் வெற்றி விபரம் இதோ:

புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர் முகமது பர்வேஸ் வெற்றிபெற்றார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை நகராட்சியில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பூக்கடை மோகன் வெற்றி பெற்றார். அதேபோல் விருதுநகர் மாவட்டம் தென் கொடிக்குளம் பேரூராட்சி 5வது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் ராஜசேகரன் வெற்றி பெற்றார்.

இன்னும் ஒருசில தொகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version