தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: விஜய் மக்கள் இயக்கத்திற்கு 3வது இடமா?

Published

on

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும், எதிர்க்கட்சியான அதிமுக ஓரளவிற்கு சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்த பாமக தனக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பதும் அமமுக மற்றும் தேமுதிக ஒரு சில இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் ஒரு வார்டு கவுன்சிலர் பதவி கூட வெற்றி பெறவில்லை என்பது சோகமான ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் பெரும்பாலானோர் வெற்றி பெற்றுள்ளது அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 169 வார்டு கவுன்சிலர் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேச்சை சின்னங்களில் போட்டியிட்டனர். விஜய் எந்தவிதமான ஆதரவு மற்றும் அறிக்கை வெளியிடாத நிலையில் விஜய்யின் படத்தை வைத்து மட்டுமே விஜய் மக்கள் மன்றத்தின் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 பேர் போட்டியிட்ட நிலையில் 110 பேர் அதில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை வைத்து பார்க்கும் போது ஊரக உள்ளாட்சி கவுன்சிலர் தேர்தலில் பெற்ற வெற்றி எண்ணிக்கையில் திமுக அதிமுகவை அடுத்து அதிக எண்ணிக்கையிலான வெற்றியை விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்களுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் அனைவருமே சுயேட்சையாக தனித்தனியாக தனி தனி சின்னத்தில் போட்டியிட்டனர் என்பதால் விஜய் மக்கள் இயக்கத்தின் பெயர் வெற்றி பட்டியலில் வரவில்லை.

இந்த வெற்றி அரசியல் விமர்சனங்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே ரீதியில் சென்றால் வரும் சட்டசபை தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் பெருவாரியான வெற்றியைப் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

seithichurul

Trending

Exit mobile version