தமிழ்நாடு

விஜய் மக்கள் இயக்கம் ஆலோசனை கூட்டம்: முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்!

Published

on

விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகக் கூட்டம் என்று கூட இருப்பதாகவும் இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் 169 உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். அதிமுக திமுகவுக்கு அடுத்து அதிக கவுன்சிலர்களை பெற்றது விஜய் மக்கள் இயக்கம் தான் என்பது ஆச்சரியத்திற்குரிய ஒரு தகவலாகும்.

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றியின் உற்சாகத்தை அடுத்து தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்தினர் முடிவு செய்துள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் அனுமதி அளித்து விட்டதாகவும் விஜய்யின் புகைப்படத்தையும் விஜய் மக்கள் இயக்கத்தின் கோடியையும் வேட்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் விஜய் வீடு அருகே உள்ள பண்ணை வீட்டில் இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் இந்த கூட்டத்தின் முடிவில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அடுத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதே விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த இலக்காக இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் மத்தியில் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

 

seithichurul

Trending

Exit mobile version