சினிமா செய்திகள்

விஜய் மக்கள் இயக்கம் கேட்ட ‘பாட்ஷா’ ரஜினி சின்னம்: மறுத்த தேர்தல் ஆணையம்!

Published

on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கம் கேட்ட பொது சின்னத்தை தேர்தல் ஆணையம் தர மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் 129 கவுன்சிலர்களை பெற்ற விஜய் மக்கள் இயக்கம் பிப்ரவரியில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் விஜய் புகைப்படம் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடி ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம் என விஜய் தரப்பிலிருந்து அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த தேர்தலில் போட்டியிட மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்களுக்கு ஒரே பொது சின்னமாக ஆட்டோ சின்னம் வழங்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியாக பதிவு செய்யாத வேட்பாளர்கள் சுயேட்சையாகவே கருதப்படுவார்கள் என்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் சின்னங்களின் அடிப்படையில்தான் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்களுக்கும் ஒதுக்கப்படும் என்றும் ஆணையம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாட்ஷா திரைப்படத்தில் ரஜினியின் ஆட்டோவை சின்னமாக கேட்ட விஜய் மக்கள் இயக்கத்திற்கு அதே சின்னம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version